தலைப்பொங்கல் கொண்டாடிய பிரசன்னா-சினேகா
நட்சத்திர தம்பதியான சினேகாவும், பிரசன்னாவும் தலைப்பொங்கல் கொண்டாடினர்.
இவர்கள் திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்தது.
தலைப் பொங்கல் என்பதால் சினேகா தனது கணவரின் தாய், தந்தையுடன் அவர்கள் வீட்டில் பொங்கல், பண்டிகையை கொண்டாடினார்.
கணவரின் உறவினர்கள் பலர் பண்டிகைக்கு வந்து இருந்தனர். எல்லோரும் ஒன்றாக பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடினார்கள்.
இது குறித்து சினேகா கூறுகையில், தலைப் பொங்கல் மகிழ்ச்சி அளிக்கிறது. பொங்கலையொட்டி பிரசன்னா ஒன்பது முழம் நீள பட்டுச்சேலை ஒன்றை எனக்கு வாங்கி கொடுத்தார்.
திருமணத்துக்கு பின்பு ஒரிரு நிகழ்ச்சிகளுக்குதான் பட்டுச்சேலை உடுத்தி உள்ளேன்.
திருமணத்துக்கு பின்பு எல்லா பண்டிகைகளும் எனக்கு பிசியானதாகவே இருந்தது. தலைப்பொங்கலும் அப்படித்தான். இது முழுமையான குடும்ப பண்டிகை.
இதுபோன்ற பண்டிகைகள் குடும்பத்தினரை ஒன்றாக்குகிறது என்றும் குடும்ப உறவுகளில் வலிமையையும் ஏற்படுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.
பிரசன்னா கூறுகையில், என் பள்ளி நாட்களில் கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி அளித்தது.
தற்போது சினேகா என்னுடன் இருப்பதால் இப்பண்டிகை எனக்கு விசேஷமான பண்டிகையாக உள்ளது என்றார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...