ஜெனிலியா கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்
கொலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜெனிலியா கடந்த வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்தார்.
இவர் திருமணத்துக்கு பின்பும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.
அங்கு முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன பாதையில் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
ஜெனிலியாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்டு பிரசாதங்கள் வழங்கி சிறப்பு மரியாதையும் செய்தனர்.
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த ஜெனிலியாவை காண ரசிகர்கள் திரண்டனர். ஆட்டோகிராப்பும் வாங்கினர்.
பின்னர் ஊடகத்தினரை சந்தித்த ஜெனிலியா கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது ஆனந்தத்தையும் மனதுக்கு நிறைவையும் கொடுக்கிறது என்றார்.
ரிதேஷ் தேஷ்முக், மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...