யோகா எனக்கு தைரியத்தை தந்தது: அனுஷ்கா
கொலிவுட்டில் அனுஷ்கா நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' படம் திரையரங்குகளில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
‘இரண்டாம் உலகம்‘, ‘சிங்கம் 2’ படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கில் ‘ராணி ருத்ரமா தேவி’ என்ற படத்தில் நடிக்கிறார்.
வரலாற்று கதையான இதில் ‘ராணி ருத்ரமா’ வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா கூறுகையில், ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடந்தது. சண்டைக் காட்சிகளை சிரமப்பட்டு எடுத்தனர்.
அதில் நடிப்பதற்கு நான் கற்ற யோகா எனக்கு மன தைரியத்தை அளித்தது.
காட்டில் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது யானைகள் எங்களை கடந்து சென்றன. பல வருடங்கள் நான் கற்ற யோகா பயிற்சிகள் அப்போதும் உதவின.
கார்த்தியும், இயக்குனர் சுராஜூம் எனக்கு வசதிகள் செய்து கொடுத்தார்கள். படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகினோம்.
கார்த்தி, சுராஜ் சகோதரத்துவத்தோடு உதவிகள் செய்தது நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த செய்தது.
நான் நடிக்கும் ‘ருத்ரமா தேவி’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும் இளையராஜாவின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை எனவும் கூறியுள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...