தலைவா அரசியல் படமல்ல: விஜய்
தான் நடித்து வரும் தலைவா, அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் விஜய் கையசைக்கும் போஸ்டர்கள், ஏதோ அரசியல் படம் என்றே திரையுலகத்தினர் மத்தியில் நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய், கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில், தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தெரிவு செய்துள்ளோம்.
மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார்.
விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ள நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார், ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...