த்ரிஷாவின் ஏக்கம்
தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை த்ரிஷா ஏக்கத்துடன் கூறியுள்ளார்.
திரு இயக்கத்தில் விஷால்- த்ரிஷா ஜோடி நடித்த சமர் படம் ரிலீசாகியுள்ளது.
இது தவிர பூலோகம், என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ரம் படங்களில் நடிக்கிறார்.
10 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கும் த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் பத்து ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருக்கிறேன்.
இது பெரிய விடயமாக இருந்தாலும் இத்தனை காலம் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருப்பது அதிர்ஷ்டம்தான்.
இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள்.
உங்களை கதாப்பாத்திரமாக நினைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன், எனவே நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சினிமா போட்டிகள் நிறைந்து காணப்பட்டாலும் எனக்குள்ள இடம் அப்படியே இருக்கிறது.
நான் நிறைய கதாப்பாத்திரங்களில் நடித்துவிட்டேன். அவற்றில் பல கதாப்பாத்திரங்கள் என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தன.
ஆனால் இதுவரை என் முழு திறமையையும் காட்டுகிற மாதிரி படங்கள் அமையவில்லை என்று கூறியுள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...