மீண்டும் இணையும் நண்பர்கள்
தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தினை இயக்கிக்கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.இதேவேளை சசிகுமார் குட்டிப்புலி படத்தில் மும்முரமாக இருக்கிறார்.இந்த படங்களை முடித்துவிட்டு இருவரும் புதிய படத்தில் இணையவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த புதிய படத்தில் சுந்தரபாண்டியன் வெற்றியின் மூலம் கொலிவுட்டின் முக்கிய நாயகனாகிவிட்ட சசி குமார் நாயகனாக நடிக்க சமுத்திரக்கனி இயக்குனர் பொறுப்பை ஏற்கவுள்ளாராம்.சமுத்திரக்கனிக்கும் சசிக்குமாருக்குமிடையில் சண்டை என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய தகவல் கொலிவுட்டில் பரவும் வதந்தியை அணைத்திருக்கிறது.ஏற்கனவே இந்த கூட்டணியில் சுப்பிரமணியபுரம், நாடோடிகள் மற்றும் போராளி போன்ற வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...