யாமி கெளதமின் கொலிவுட் திட்டம்
'விக்கி டோனர்' என்ற இந்திப் படத்தில் விவாகரத்து பெற்ற பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் மொடல் அழகி யாமி கெளதம்.
கொலிவுட்டில் ராதா மோகனின் 'கௌரவம்' , 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படங்களில் நாயகியாக நடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிக்கப் போகிறேன்.
இனி தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவேன் என்றும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வருவேன் எனவும் கூறியுள்ளார்.
படப்பிடிப்பில் தமிழ் வசன உச்சரிப்பை சொல்லித் தந்த 'கௌரவம்' மற்றும் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படங்களில் இயக்குனர் குழுவிற்கு யாமி கெளதம் நன்றி தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் யாமியின் 'என்ட்ரி' முன்னணி நடிகைகளை அதிரவைத்துள்ளது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...