நான் தல ரசிகன்: பரோட்டா சூரி
காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன், நான் 'தல' அஜீத் ரசிகன் என்று நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சரட்டுமேனிக்கு பரோட்டா சாப்பிட்டு புகழ்பெற்றவர் இந்த சூரி.
இந்த காட்சி மிகவும் பிரபலமானதையடுத்து அவர் பெயரே பரோட்டா சூரியாகிவிட்டது.
மூன்றோடு நான்காவது கொமெடியனாக நடித்து வந்த சூரி தற்போது நாயகனின் நண்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
சூரி தனது வாழ்க்கையில் வெண்ணிலா கபடி குழு படத்தை மறக்க மாட்டார் என்று தெரிகிறது.
இந்த படத்தின் ஞாபகமாக தனது மகளுக்கு வெண்ணிலா என்று பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில் சூரி சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது, காலரைத் தூக்கி பெருமையாக சொல்வேன்.
நான் 'தல' அஜீத் ரசிகன் டா என்று தெரிவித்துள்ளார். சூரி இதுவரை அஜீத்துடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...