தமிழ் சினிமாவிற்குள் மீண்டும் நுழையும் நிலா
கொலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகபடுத்தப்பட்டு அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நிலாவின் முகவரி தற்போது தெரியவில்லை.
குளிக்க மினரல் வாட்டர் கேட்பது, படப்பிடிப்பு தளங்களில் ஆர்பாட்டமாக நடந்து கொள்வதென பல சர்ச்சைகளில் சிக்கினார்.
இதன் காரணமாக மிகச்சில படங்களிலேயே நடித்தார். இந்நிலையில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலாவுக்கு மீண்டும் ஒரு ரீ- என்ட்ரி கிடைக்கிறது.
பரத்துடன் நிலா நடித்த கில்லாடி என்ற படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. இந்த படத்தை தற்போது வெளியிட தயாரிப்பாளர்கள் முனைந்திருக்கின்றனர்.
எனவே இந்த படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருமென நிலா நம்புகிறார்.
மேலும் இந்தி, தெலுங்கு படங்களில் நிலா நடித்து வருகிறார். உலகம் முழுவதும் தனக்கு ஹோட்டல் இருக்கிறது என்றும் பேஷன் ஷோக்கள் நடத்துவதாகவும் நிலா குறிப்பிடுகிறார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...