'விஸ்வரூபம்' பட விவகாரம்: கமல்ஹாசனின் அதிரடி முடிவு (வீடியோ இணைப்பு)
தமிழகம் முழுவதும் கமலின் விஸ்வரூபம் திரையரங்குகில் வெளியாவதற்கு முன்பே முதலில் டீ.டி.எச்-ல் ஒளிபரப்புவுதாக இருந்தது.
இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து கமல் தரப்பும், திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் கமல் விஸ்வரூபம் வெளியீடு தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்தார்.
இதில் அவர் கூறுகையில், விஸ்வரூபம் என் படம். அதை எப்படி வெளியிடவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது.
இதில் மற்றவர்கள் நுழைய அனுமதிக்க முடியாது.
நாளை டிடிஎச்-சிலும் தொடர்ந்து ஜனவரி 11ம் திகதியன்று திரையரங்குகளிலும் வெளியாவதாக இருந்த விஸ்வரூபம் படம் எங்களது வசதிக்காக மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, யாருடைய தூண்டுதலாலும் அல்ல.
எனது ரசிகர்கள் இதுவரை அமைதியாக இருக்கிறார்கள். இனியும் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அது என்னை எதிர்ப்பவர்களிடம் தான் இருக்கிறது என்றார்.
மேலும் மேலும் எனக்கு தொல்லை கொடுத்தால் இந்த பிரச்சனையில் எனக்கு பக்கபலமாக எனது ரசிகர்கள் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 25 அல்லது 26ம் திகதி டி.டி.எச்-ல் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனும் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விபரம், வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.
Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...