Press enter to see results or esc to cancel.

மத்திய அரசுக்கெதிராக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் உண்ணாவிரதம்


மத்திய அரசுக்கெதிராக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் வரும் 7ம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் வருமானத்துக்கு ஏற்ப சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனையொட்டி கடந்த மாதம் 30ஆம் திகதி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 7ம் திகதி திங்கள் கிழமை வள்ளுவர்கோட்டம் முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து சின்னத்திரை, தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சின்னத்திரை தொடர்கள் உட்பட எந்தவித படப்பிடிப்புகளும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்பதையும், ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்குமாறு சங்கத்தின் தலைவர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs