சேவை வரி – ஜன.7 படப்பிடிப்புகள் ரத்து
கிடைக்கிற சந்து பொந்திலெல்லாம் கை வைக்க ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.
உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் கடன் வாங்கியோ, லோன் வாங்கியோ ஒரு பில்டிங்கை கட்டி வாடகைக்கு விடுகிறீர்கள்.
நன்றாக கவனிக்க… நிலம், அதில் கட்டிய பில்டிங் எல்லாம் உங்கள் பணம். அந்த பில்டிங்கை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்துக்கு வருமான வரியும் கட்டுகிறீர்கள்.
இது போதாது என்று மத்திய அரசு மேலுமொரு வரியை புகுத்தியிருக்கிறது.
நீங்கள் வாடகைக்கு விட்டிருக்கும் பில்டிங்கின் மூலம் கிடைக்கும் வாடகைப் பணம் வருடத்துக்கு பத்து லட்சத்தை தாண்டினால் பன்னிரெண்டு சதவீதம் வரியாக கட்டியாக வேண்டும்.
ஒரு லட்ச ரூபாய் உங்களுக்கு வாடகையாக – இது ஒரே இடமாக இருக்க வேண்டிய அவசியமில்லை – கிடைத்தால் 12 ஆயிரம் அரசுக்கு தர வேண்டும்.
இது தவிர வருமான வரி.
சரி, அப்படியே சினிமாவுக்கு வந்தால் கேளிக்கை வரி என்று கணிசமாக வசூலிக்கிறார்கள்.
இது போதாது என்று சேவை வரியை விதிக்க இருக்கிறது மத்திய அரசு.
சென்ற வருடமே சேவை வரியைஅமல்படுத்த நினைத்து கடும் எதிர்ப்புக்குப் பின் வாபஸ் வாங்கியது.
ஆனால் 2013 ல் கண்டிப்பாக சேவை வரி அமல்படுத்தப்படும் என அறிவி எதிர்த்து ஜனவரி 7 ஆம் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்து மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக திரையுலகம் கூட்டாக அறிவித்துள்ளது.
அப்படியே பொது விநியோகத்தை – ரேஷன் – ரத்து செய்து பொருட்களுக்குப் பதில் பணம் தரப் போவதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடித்தட்டு மக்களை சுரண்டி வால் மார்ட் போன்ற அன்னிய பகாசுர நிறுவனங்களுக்கு வால் பிடிக்கும் இந்த கேடுகெட்ட மத்திய அரசு கவிழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியிருப்பதாக தெரியவில்லை.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...